சிலருக்கு பள்ளிவாசல் என்றாலே அதை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் உருவாகிறது. அப்படி தான் வடநாடுகளில் இன்றைய காலகட்டம் மாறிவிட்டது. ஏனென்றால் அவர்களுடைய மண்டையில் மதவெறி திணிக்கப்பட்டு விட்டது.
சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்
பல இடங்களில் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால் இதை தடுக்க எந்த நடவடிக்கைகளும் மத்திய அரசால் எடுக்கப்படவில்லை. ஏன் இதைப் பற்றி மத்திய அரசு வாய் கூட திறக்க விரும்பவில்லை.
பீகார் மாநிலம் சம்பாரனில் உள்ள கல்யாண்பூர் தொகுதிக்கு உட்பட்ட மங்கள்பூரில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அந்தப் பள்ளிவாசலை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருக்கின்றார்கள்.
READ MORE: தர்காவிற்குள் தண்ணீர் குடிக்க நுழைந்த இந்து சிறுவன் ! அழகாக பேசிய இஸ்லாமியர்கள்.
அடித்து உடைக்கப்பட்ட பொருட்கள்
பள்ளிவாசலில் இருந்த AC , Switch Board, மாட்டி வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்கள், மைக்குகள், அங்குள்ள மேஜைகள் அனைத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருக்கின்றார்கள். பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அந்த பள்ளிவாசலின் ஜமாத் நிர்வாகிகள் அங்குள்ள காவல் துறையிடம் புகார் ஒன்றை கொடுத்து இருக்கின்றார்கள்.
போலீசார் குவிப்பு
இதனால் நிலைமையை கட்டுப்படுத்த அங்கே போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். நாளுக்கு நாள் பள்ளிவாசல்கள் இந்தியாவில் பல இடங்களில் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் பற்றி மத்திய அரசு வாய் திறக்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்ட வீடியோவை பள்ளிவாசல் நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.
लोकेशन : कल्याणपुर प्रखंड,पूर्वी चंपारण,बिहार
— The Muslim (@TheMuslim786) January 2, 2025
मंगलापुर मस्जिद के अंदर घुसकर तोड़फोड़ की गई । pic.twitter.com/8QeJahy7jy