கலவரம்: இந்தியாவில் முஸ்லிம்கள் யாரும் இருக்கக்கூடாது ! இந்தியாவில் இருக்கின்ற முஸ்லிம்களை பாகிஸ்தானிகள் அல்லது பங்களாதேசிகள் என்று சொல்லி இந்தியாவை விட்டு விரட்டி விட வேண்டும். இந்தியாவில் உள்ள 800 வருட இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த சின்னங்களை அழித்து விட வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
அப்படி தான் பல இஸ்லாமியர்களுடைய வீடுகளும், சொத்துகளும் பறிக்கப்பட்டு வருகிறது.
கலவரம் செய்த இந்துத்துவாவாதிகள்
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் என்ற இடத்தில் பாலதி என்ற கிராமம் இருக்கிறது. அங்கே சில முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. அந்த இடத்திலே வேண்டுமென்றே வகுப்புவாத கலவரத்திற்கு திட்டமிடப்பட்டு கலவரம் நடந்திருக்கிறது.
READ MORE: பள்ளிவாசலை சேதப்படுத்திய மர்ம நபர்கள் ! போலீசார் குவிப்பு.
அங்கே நடந்த வகுப்புவாத கலவரத்தில் இஸ்லாமியர்களுடைய கடைகள் முழுவதுமாக தீயிட்டு எரித்து சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இரவில் கல்வீச்சு நடந்து இருக்கிறது.
#Maharashtra | Communal tension erupted in Paladhi, Jalgaon, following a dispute over honking by Minister Gulab Rao Patil's convoy, leading to arson and stone-pelting.
— Organiser Weekly (@eOrganiser) January 2, 2025
A three-day curfew has been imposed, with 25 detained and 7 arrested. pic.twitter.com/CnWtvloWZz
முஸ்லிம் சொத்துக்கள் குறிவைப்பு
எங்கேயாவது இந்துத்துவவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டால் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளையும், கடைகளையும், வாகனங்களையும் தேர்ந்தெடுத்து அந்த சொத்துக்கள் எல்லாம் வேண்டுமென்றே சூறையாடி விடுகின்றார்கள். அப்படி தான் இந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. அந்த இடத்தில் உள்ள இஸ்லாமியர்களுடைய கடைகள் மட்டும் சூறையாடப்பட்டு இருக்கிறது அதில் ஒரு இந்து சகோதரர்களுடைய கடை மட்டும் பாதுகாப்பாக எந்த சேதாரம் இல்லாமல் அப்படியே இருக்கிறது அதை சிலர் வீடியோ பதிவு செய்து இது வேண்டுமென்றே இஸ்லாமியர்களுடைய கடைகளை தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட கலவரம் என்று சொல்லி வருகிறார்கள்.
இஸ்லாமியர்கள் வேதனை
இஸ்லாமியர் ஒருவருடைய கார் கேரேஜில் வைக்கப்பட்டிருந்த 4, வாகனங்கள் தீட்டு கொளுத்தப்பட்டிருக்கின்றன. இன்னொரு இஸ்லாமியர் சொல்லும் போது ” என்னிடமிருந்த செருப்பு மற்றும் மொபைல் கடை எரிந்து சாம்பலாகி விட்டது இதனால் எனக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது ” என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கின்றார்.
लोकेशन : पलाधी गांव,जलगांव,महाराष्ट्र
— The Muslim (@TheMuslim786) January 3, 2025
मुस्लिम व्यक्ति ने रोकर सुनाई आपबीती हिंसा के दौरान उसकी गैरेज में रखी 4 गाड़ियों को उपद्रवियों ने जला दिया। pic.twitter.com/28BBkM0YC7
இன்னொரு இஸ்லாமிய சகோதரர் அங்கே கடை வைத்து இரண்டு வருடங்கள் தான் ஆகியிருக்கின்றது. அதுக்குள் அவருடைய கடையை கலவரத்தில் சேதப்படுத்திய விட்டார்கள் இதனால் 3 லட்சம் ரூபாய் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.
#WATCH | Maharashtra | Shopkeeper Shakil from Paladhi village, Jalgaon claims his shop suffered damages in the clash between two groups here last night
— ANI (@ANI) January 1, 2025
He says, "I have filed a complaint. I have suffered losses of around Rs 3 lakhs. I have been running this shop for the last 2… pic.twitter.com/rGjcWx98Zi
இதனால் அந்த இடத்தில் 3 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.