மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் கோயிலுக்கு சொந்தம் என இந்து அமைப்புகளும், பாதி மலை எங்களுக்கே சொந்தம் என தர்கா தரப்பினரும் கூறிவரும் நிலையில் இது குறித்து ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நடைபெற்ற வந்துள்ள வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகள் என்ன என்பது குறித்து ஒரு பார்வை.
வழக்கு 1
முதன்மை கூடுதல் நீதிபதி, மதுரை நீதியரசர் P.G. ராம ஐயர்
O.S. No. 4/1920 தீர்ப்பு நாள் 25.08.1923.
வழக்கு தொடுத்தவர்கள் :
திருப்பரங்குன்றம் தேவஸ்தானம்
VS
1. இந்திய நாட்டிற்கான மாநிலச் செயலாளர்
2. மதுரா தாலுக் போர்டு தலைவர்
3. அலீ கான் சாகிப் மற்றும் 11 இதர பேர்.
வழக்கு : நெல்லித்தோப்பில் இஸ்லாமியர்கள் புதிய மண்டபம் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும் நெல்லித்தோப்பு, மற்றும் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கே சொந்தம் என அறிவிக்க கோரியும் வழக்கு.
இறுதி உத்தரவு :
நெல்லித்தோப்பு மற்றும் அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லி தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், மலை உச்சி, பள்ளிவாசலும் கொடிமர கம்பமும் உள்ள மலை உச்சியும் தவிர்த்த மற்ற மலை முழுவதும் மற்றும் கிரி வீதி (தனியார் நிலங்களை தவிர்த்து) முழுவதும் மனுதாரர் முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதாகும். நெல்லித்தோப்பு மற்றும் அதில் உள்ள அனைத்தும், நெல்லித்தோப்பிலிருந்து மேலே உள்ள மசூதி வரையிலான படிகள், மசூதி மற்றும் கொடிக்கம்பம் இருக்கும் மலையின் உச்சி முழுமைக்கும் முஸ்லிம்களே உரிமையாளர்கள் ஆவர்.
வழக்கு 2
Privy council, London
P.C. Appeal No. 5/1930 Order dated: 12.05.1931
(இந்திய விடுதலைக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் கொண்ட லண்டனில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தான் லண்டன் பிரைவி கவுன்சில் ஆகும்)
வழக்கு : மேலே குறிப்பிடப்பட்டுள்ள O.S. No. 4/1920 வழக்கின் 25.08.1923 தேதியிட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், மலை முழுவதும் முருகன் கோவில் தேவஸ்தானத்திற்கே சொந்தம் என அறிவிக்க கோரியும் மேல்முறையீட்டு வழக்கு.
இறுதி உத்தரவு :
மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. O.S. No. 4/1920 வழக்கில் 25.08.1923 தேதியிட்ட உத்தரவு உறுதி செய்யப்படுகிறது தேவஸ்தானமும் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் தீர்ப்பின்படி அவரவர்களுக்கு பாத்தியப்பட்ட பகுதிகளை அனுபவித்துக் கொள்ள வேண்டியது.
வழக்கு 3
மாவட்ட சார்பு நீதிமன்றம், மதுரை நீதியரசர் K. சுப்பிரமணியன்
O.S. No. 506/1975 4 22.11.1978.
வழக்கு தொடுத்தவர்கள் :
செயல் அலுவலர், தேவஸ்தானம், மதுரை
Vs
தாஹாமியான் என்ற உஸ்மான் கான் மற்றும் இதர 5 பேர்
வழக்கு : மலை உச்சியில் உள்ள தர்காவின் காம்பவுண்ட் சுவற்றிற்கும் கொடிமரம் ஏற்றுகின்ற பாறைக்கும் இடையே உள்ள இடத்தில் தர்கா நிர்வாகம் சார்பாக சுனை கட்டுவதற்கு நடைபெறுகின்ற மராமத்து பணியை தடுத்து நிறுத்த கோரியும், அந்த இடம் கோயில் நிர்வாகத்திற்கே சொந்தம் என அறிவிக்க கோரி வழக்கு.
இறுதி உத்தரவு :
நெல்லித்தோப்பு, புதிய மண்டபம் மற்றும் நெல்லித்தோப்பிலிருந்து மசூதி வரையிலான படிகள், மலை உச்சியில் உள்ள மசூதி மற்றும் கொடிக்கம்பம் இருக்கும் மலை உள்ளிட்ட மலை உச்சி முழுவதும் தர்காவிற்கு சொந்தம் என O.S. No. 4/1920 வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, வழக்கு தொடரப்பட்டுள்ள இடமும் தர்காவிற்கே சொந்தமானது ஆகும். ஆகவே மனுதாரர் தேவஸ்தானம் கோரியுள்ளபடி சுனை கட்டும் பணிக்கு எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வழக்கு 4
மெட்ராஸ் உயர் நீதிமன்றம், நீதியரசர் J. கனகராஜ்
W.P. No 18884/1994 dated 21.11.1996
வழக்கு தொடுத்தவர்கள் :
V. தியாகராஜன், தலைவர் இந்து பக்த ஜன சபை
Vs
உள்துறை செயலாளர், இந்திய அரசு மற்றும் இதர 8 பேர்
வழக்கு : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி வழக்கு.
இறுதி உத்தரவு :
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது குறித்த O.S. No. 4/1920 வழக்கின் தீர்ப்பே இறுதியானதாகும். அந்த தீர்ப்பை மதித்து ஏற்று நடக்க வேண்டியது அனைத்து தரப்பாரின் மீதும் கடமையாகும். கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து O.S. No. 4/1920 வழக்கின் தீர்ப்பில் தீர்ப்பில் தர்காவிற்கு சொந்தமான இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நெல்லித்தோப்பு, நெல்லித்தோப்பில் இருந்து மசூதிக்கு செல்லும் படிக்கட்டுகள், மசூதி, கொடிமரம் மற்றும் மலை உச்சி ஆகிய பகுதிகளை தவிர்த்து, தர்கா இடங்களில் இருந்து 50 மீட்டர் இடைவெளி விட்டு தீபம் ஏற்றிக்கொள்ளலாம்.
வழக்கு 5
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
நீதியரசர் R. பாலசுப்பிரமணியன்
Crl O.P. No 21192 of 1998 dated 30.11.1998
வழக்கு தொடுத்தவர்கள் :
Y. தாவூத் கான்
சீனியர் டிரஸ்டி சிக்கந்தர் பாதுசா அவுலியா தர்கா
Vs
மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் இதர 4 நபர்
வழக்கு: மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவை அகற்றப் போவதாகவும், தர்கா அமைந்துள்ள இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப் போவதாகவும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்பினர் கூறிவரும் நிலையில் தகுந்த பாதுகாப்பு வேண்டி.
தீர்ப்பு :
கோயிலுக்கும் பள்ளிவாசலுக்கும் பாத்தியப்பட்ட இடங்கள் குறித்து O.S. No. 4/1920 வழக்கிலேயே தீர்வாகிவிட்ட நிலையில், மேலும் அது 5/1930 மேல்முறையீட்டு வழக்கில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மலை உச்சியில் உள்ள பள்ளிவாசலுக்கும் தர்காவிற்கும் இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தேவையான அளவு எண்ணிக்கையில் காவல்துறையைக் கொண்டு திருப்பரங்குன்றம் நகர் மற்றும் மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தேவையான அனைத்து இடங்களிலும் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டும்.
வழக்கு 6
சார்பு நீதிமன்றம் திருமங்கலம், நீதியரசர் K. ஜெயக்குமார்
மேல் முறையீடு வழக்கு எண் 173/2011 Order dt 29.08.2012
வழக்கு தொடுத்தவர்கள் :
துணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
Vs
1. நிர்வாக அதிகாரி திருப்பரங்குன்றம் டவுன் பஞ்சாயத்து
2. பாஷா கான் மேனேஜிங் டிரஸ்டி சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா
வழக்கு : மலை மீது நகராட்சி சார்பாக மின்விளக்கு அமைப்பதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு.
இறுதி உத்தரவு :
OS No. 4/1920 தீர்ப்பின்படி கோயிலுக்கு சொந்தமான மலையடிவாரம் முதல் நெல்லித்தோப்பு வரை உள்ள பகுதிகளுக்கு திருப்பரங்குன்றம் நகராட்சி, கோயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்கள் ஒப்புதலோடு நகராட்சியே மின் விளக்கு அமைக்க வேண்டும்.
நெல்லித்தோப்பு முதல் தர்கா வரை உள்ள தர்காவிற்கு சொந்தமான பகுதிகளுக்கு தர்கா நிர்வாகம் அதன் சொந்த செலவில் மின் விளக்கு அமைக்க வேண்டும்.
வழக்கு 7
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை, அமர்வு
நீதியரசர் R. சுப்பிரமணியன் , நீதியரசர் L. விக்டோரியா கௌரி
WP(MD) No.15565 of 2023 dt 28.06.2023
வழக்கு தொடுத்தவர்கள் :
A.P. ராமலிங்கம், இந்து மக்கள் கட்சி/அகில பாரத அனுமான் சேனா
Vs
இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் மற்றும் இதர 7 பேர்
வழக்கு : மலை மீது உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க கோரி.
இடைக்கால உத்தரவு :
நாளை 29.06.2023 நடைபெற உள்ள பக்ரீத் தொழுகையை நெல்லி தோப்பில் தொழுவதற்கு எவ்வித இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது. (No Interim stay granted).
அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. 4 வாரங்கள் கழித்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடப்படுகிறது.
👇 இந்த தகவல் PFD வடிவில் வேண்டுமென்றால் DOWNLOAD செய்து கொள்ளுங்கள். 👇
( மதுரை திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து ஒரு மத அமைதியின்மை உருவாவதை தவிர்க்க விரும்புபவர்களும், நீதிமன்ற உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டிய பொறுப்புள்ள நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகன்களும், இந்துக்கள் முஸ்லிம்கள் இருதரப்பாரிலும் உள்ள அனைவருக்கும் இந்த நீதிமன்ற உத்தரவுகள் சென்றடையும் படியாக அதிகமாக இதை நகலெடுத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரப்பி பொதுவாக்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். )