உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்) கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணியில் 2025 மகா கும்பமேளா ஜனவரி 14 முதல் 45 நாட்கள் நடைபெற்றது. இந்த ஆன்மீக விழாவில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், ஜனவரி 29-ல் தை அமாவாசை நாளில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம், பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைகள் உலகளவில் பேசப்படுகிறது.
ஜனவரி 29: கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள்
தை அமாவாசை நாளான ஜனவரி 29 ஆம் தேதி அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 நபர்கள் உயிரிழந்ததாகவும் 130 நபர்கள் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் உலா வருகிறது. ஆனால் இதைப் பற்றிய ஒரு வீடியோவில் உயிரிழந்தவர்களுடைய சடலங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருப்பார்கள் என்பது தெரிய வருகிறது. இருப்பதாக ஒரு வீடியோ உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோக்கள் பழைய வீடியோக்கள் என்பதாக அங்குள்ள போலீசார் சொல்லி இருக்கின்றார்கள்.
பாதுகாப்பு சீர்கேடுகள்: நேரடி சாட்சியங்கள்
கும்பமேளாவில் சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று அங்குள்ளவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதில் வீடியோவில் ஒருவர் பேசும் போது,
என்னுடைய பணம் தொலைந்து விட்டது. எங்களுடைய ஆடைகள் தொலைந்து விட்டது. உன்னுடைய அம்மாவின் ஆடை கூட்ட நெரிசலில் தொலைந்து விட்டது. என்னுடைய அம்மா ஆடை இல்லாமல் இருக்கிறார். ஆடை இல்லாமல் இருந்தால் என்ன ? ஆடை இல்லாமல் தான் நீராடுகிறார்கள். என்று சிலர் பதில் சொல்கிறார்கள். – பாதிக்கப்பட்ட குடும்பம்
सीएम योगी देखिए और शर्म कीजिए👇#नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/XYTAFoLCCa
— SamajwadiPartyMediaCell (@MediaCellSP) January 29, 2025
இன்னொரு வீடியோவில் அங்கே கடை வைத்திருக்க கூடிய கல்லூரி படிக்கக்கூடிய மாணவி கூறும் போது :
இங்கே அதிகமான கூட்டம் வர ஆரம்பித்தது . என்னுடைய கடையில் மட்டும் 4 நபர்கள் இறந்து கிடந்தார்கள். சரியான பாதுகாப்பு இங்கே கொடுக்கப்படவில்லை. என்னுடைய கடையிலிருந்து பணம் எல்லாம் திருடு போய்விட்டது. போலீஸ்காரர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. பக்தர்கள் குடிப்பதற்கு குடிநீர் வசதி கூட சரியாக செய்து வைக்கவில்லை. –கடை வைத்திருக்கும் கல்லூரி மாணவி
यह वीडियो इतना शेयर करो कि मुख्यमंत्री योगी आदित्यनाथ पहुंच जाए…#KumbhStampede #MahakumbhStampede #MahaKumbh2025 pic.twitter.com/l3CwwWN6q2
— Amit Yadav (Journalist) (@amityadavbharat) January 30, 2025
VIP க்கு முன்னுரிமை வழங்கிய உ.பி முதல்வர்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் “மக்களின் பாதுகாப்பை விட VIP-களின் ஆடம்பரத்தை முன்னுரிமைப்படுத்தியுள்ளார் ” என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
READ MORE: வனத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்ட 60 முஸ்லிம் வீடுகள்
இதைப் பற்றி அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அசோக் சிங் என்பவர் சொல்லும் போது:
VIP treatment என்று சொல்லி மகா கும்பமேளா அழிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் புனிதத்தை கெடுத்து விட்டார்கள் என்றும் உத்தரபிரதேச அரசன் மீது குற்றம் சாட்டியிருக்கின்றார்.
– வழக்கறிஞர் அசோக் சிங்
वीआईपी प्रोटोकॉल के चक्कर में पूरे महाकुंभ मेले का सत्यानाश किया जा रहा है।
— Dr. Ashutosh Verma (Patel) (@DrVermaAshutosh) January 27, 2025
– अशोक सिंह, पूर्व अध्यक्ष, इलाहाबाद हाइकोर्ट बार एसोसिएशन #MahaKumbh2025 pic.twitter.com/JAGla8jeZi
ஒரு இடத்திலே லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்று சொன்னால் அங்கு பலத்த பாதுகாப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் போனது வேதனைக்குரிய விஷயம். எல்லா மக்களையும் வாருங்கள் என்று அழைத்துவிட்டு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் போனது யோகி ஆதித்யநாதின் மிகப்பெரிய குற்றமாகும் என்று அங்குள்ளவர்கள் பேசி வருகிறார்கள்.