உத்திரப்பிரதேச மாநிலமத்தில் உள்ள சம்பல் என்ற இடத்தில் ஷாஹி ஜமா மஸ்ஜித் தொடர்பான பிரச்சனை வைரலாக பேசப்பட்டு வருகிறது.
4 இஸ்லாமியர்கள் பலி
சம்பல் ஜமா மஸ்ஜித் கோவிலை இடித்து தான் கட்டப்பட்டது என்ற பிரச்சனை பெரிதாகி , அங்கே வன்முறை உருவாகி 4 இஸ்லாமிய இளைஞர்களின் உயிர்களை பழிவாங்கி இருக்கிறது .
READ ALSO: Best dental care with principal dental insurance
READ MORE: பள்ளிவாசலை தகர்ப்பதை போன்று சைகை செய்த BJP தலைவர்.
25 முஸ்லிம் இளைஞர்கள் கைது
இந்த பிரச்சனை இன்னும் ஓயாத இந்த நேரத்தில் மீண்டும் ஒரு பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது. அந்த இடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 25 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து இருக்கிறது காவல்துறை. ஆனால் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
— kamaal (@nnworldsnew) November 25, 2024
காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தவில்லை
துப்பாக்கி சூடு சம்பந்தமாக மீடியாக்கள் காவல்துறையிடம் கேட்ட போது . மொரதாபாத் கமிஷ்னர் ஆஞ்சநேய குமார் சிங் சொல்லும் போது :
காவல்துறை யாரையும் சுடவில்லை ! அப்போது போலீஸ் இடத்தில் பிளாஸ்டிக் புல்லட்டு தான் இருந்தது .
— kamaal (@nnworldsnew) November 25, 2024
என்று மீடியாக்களிடம் பேட்டி கொடுத்திருக்கின்றார்.
காவல்துறை தான் துப்பாக்கி சூடு நடத்தியது
ஆனால் இந்த துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பற்றி ஜமா மஸ்ஜித் வழக்கறிஞர் ஜாபர் அலி ஒரு செய்தியாளர்களின் சந்திப்பில் சொல்லும் போது :
துப்பாக்கி சூடு நடத்துவது சம்பந்தமான விவாதத்தின் போது நான் அங்கே இருந்தேன். DIG, ASP, DM மூன்று பேரும் துப்பாக்கி சூடு நடத்தும் படி பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது நான் அங்கே இருந்தேன். இதைப் பற்றிய விஷயம் எனக்கு தெரிய வந்ததும் அங்குள்ள மக்களுக்கு தயவு செய்து நீங்கள் கலைந்து சென்று விடுங்கள் இங்கே துப்பாக்கி சூடு நடக்கப் போகிறது என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்தேன். இதை கேட்டதும் 75% போராட்டகார மக்கள் பின்னே சென்று விட்டார்கள்.
— kamaal (@nnworldsnew) November 25, 2024
என்று ஜமா மஸ்ஜித் வழக்கறிஞர் ஜாபர் அலி அவர்கள் மீடியாக்களிடம் பேட்டி ஒன்றை அளித்திருக்கின்றார்.
கைது நடவடிக்கை தவறு
துப்பாக்கி சூடு பற்றி போலீஸ் அதிகாரிகள் பொய் பேசி வருகின்றார்கள் என்றும், அப்படி இல்லையென்றால் அங்கே யார் துப்பாக்கி சூடு நடத்தியது? அவர்களை கண்டுபிடிப்பது அரசின் கடமை அல்லவா ? உத்திரப்பிரதேசத்தில் துப்பாக்கி சூடு என்பது பானி பூரி சாப்பிடுவது போல ஆகிவிட்டது . சுட்டவர்களை கண்டுபிடிக்காமல் தேவையில்லாமல் அப்பாவி முஸ்லிம்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது அநியாயமான செயல் என்றும் சமூக அக்கறையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.