ஜமா பள்ளிவாசல் ஒரு கோயில் ! மீண்டும் கலவரமான உத்தரப்பிரதேசம்.

மீண்டும் ஒரு பள்ளிவாசலை இடிக்க ஏற்பாடு ! கலவரமாக மாறிப்போன உத்தரபிரதேசம்.

பள்ளிவாசல் எப்படி கோயிலாக மாறியது

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் சம்பால் என்ற ஊரில் ஷாஹி ஜமா பள்ளிவாசல் இருக்கிறது. 500 வருட பழமையான இந்த ஜமா பள்ளிவாசல் ஒரு ஸ்ரீ ஹரிஹர் கோயில் என்றும், 1529 ஆம் ஆண்டு பாபர் ஆட்சியின் போது இந்த கோயில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது என்றும் சொல்லி இந்துத்துவா குழு வழக்கு தொடர்ந்திருந்தது.

ஜமா பள்ளிவாசல் ஒரு கோயில் ! மீண்டும் கலவரமான உத்தரப்பிரதேசம்.

ஆய்வு செய்ய வந்த குழு

இது பள்ளிவாசலா அல்லது கோயிலா என்பதை ஆராய்ச்சி செய்ய ராஜேந்திர பன்சியா , SP கிருஷ்ண பிஸ்னோய் , DSM வந்தனா மிஸ்ரா, வட்டார அதிகாரி அனுஜ் சவுத்ரி மற்றும் தாசில்தார் ரவி சோன்கர் ஆகியோரின் மேற்பார்வையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆய்வு நடத்துவதற்காக இந்த ஆய்வு குழு காலை 6:00 மணிக்கு பள்ளிவாசல் இருக்கும் இடத்திற்கு வந்தது.

மத முழக்கத்துடன் வந்த குழு

ஜெய் ஸ்ரீ ராம் “என்ற மத முழக்கத்துடன் ஆய்வு நடத்தும் பள்ளிவாசலுக்கு நுழைந்தது அந்த குழு !அங்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளூர் போலீஸ் மற்றும் பலரும் கொண்டுவரப்பட்டார்கள்.

பல வருடங்களாக இருக்கும் எங்களுடைய பள்ளிவாசல் எப்போது கோயிலாக மாறியது ? எங்களுடைய பள்ளிவாசலை ஆய்வு செய்வதற்க்கு எதற்காக “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்லிக்கொண்டு ஆய்வு நடத்துவதற்காக வர வேண்டும் ? என்று அங்குள்ள மக்கள் போராட ஆரம்பித்தார்கள். பல சலசலப்புகளுக்கு மத்தியில் உத்திரபிரதேச மாவட்டம் சம்பாலில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த சம்பவம் ஆய்வு நடந்து கொண்டிருக்கும்போதே சுமார் 2 மணி நேரம் கழித்து ஆரம்பமானது.

READ ALSO: Unlawful arrest civil suit lawyer in california

READ MORE: முஸ்லிம்கள் தான் யூதர்களை கொலை செய்ய ஹிட்லரை துண்டினார்கள் . பொய் பேசிய இஸ்ரேல் பிரதமர்

3 இஸ்லாமியர்கள் மரணம்

அங்கிருந்த போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்கள். நிலவரம் கை மீறி போய்விட்டதால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இருவருக்கிடையே கல்வீசு நடைபெற்றது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. அங்கு நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அங்குள்ள முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று இஸ்லாமிய கட்சிகள் சொல்லி இருக்கிறது.

இந்த கலவரத்தில் நாவேத், நயீம், முகமது பிலால் என்ற மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நல்லா இருந்த நாட்டை நாசமாக்கி விட்டது இந்த பாரதிய ஜனதா அரசு என்று சமூக வலைத்தளங்களில் மோடி அரசுக்கு எதிரான கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Video:

Leave a Comment