பாலஸ்தீனத்தில் பல நாட்களாக இஸ்ரேலிய ராணுவம் இன அழிப்பை செய்து வருகிறது.
முஸ்லிம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
பாலஸ்தீன முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் பல்வேறு முயற்சியை எடுத்து பல வருடங்களாக வயதானவர்கள், சிறுவர்கள் என்றும் பார்க்காமல் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது.
ஆனால் அங்குள்ள முஸ்லிம்கள் பாலஸ்தீனம் என்பது எங்களுடைய நாடு ! நாங்கள் பாலஸ்தீன மக்கள் ! ஒருபோதும் எங்களுடைய நாட்டை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என்று பகிரங்கமாக அங்குள்ளவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இஸ்ரேல் சிறிதும் பின்வாங்காமல் பாலஸ்தீனத்தில் உள்ள காசா, ரஃபா மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
READ MORE: ILA dental group insurance accepted
READ ALSO: ஜும்ஆ அறிவிப்பு ! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வாய்ப்பு !
பள்ளிவாசலை தீட்டு கொளுத்திய இஸ்ரேல்
அதுவும் அங்குள்ள யூத சிறுவர்களை பயன்படுத்தி விளையாடுவதற்காக ஏவுகணை வீசி விளையாடி வருகிறார்கள் என்றெல்லாம் பாலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார்கள்.
ஆனால் இப்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் ரஃபாவின் மையத்திலுள்ள அல் பத்ர் பள்ளிவாசலை தீயிட்டு இஸ்ரேலிய ராணுவம் கொளுத்தி இருக்கிறது. கொளுத்தப்பட்ட பத்ர் பள்ளிவாசல் உடைய போட்டோவை இஸ்ரேலிய ராணுவம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறது.
இதனால் உலகெங்கிலும் இஸ்ரேலுக்கு எதிரான கட்டணங்கள் வலுத்து வருகிறது. இது இனப்படுகொலையை பிரதிபலிப்பாக இருக்கிறது என்று சமூக அக்கறை உள்ளவர்கள் கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.