சைனாவில் மீண்டும் வைரஸ் பரவல் ? HMPV என்ற புதிய வகையான வைரஸ் பரவுவதாக வெளியாகும் செய்தி உண்மையா ?
மீண்டும் வைரஸ்
கொரோனா அலை ஓய்ந்து இப்போது தான் சில வருடங்கள் கழிந்தது அதற்குள் மீண்டும் ஒரு புதிய வைரஸ் வந்துவிட்டதாக மீடியாக்களில் சொல்லப்படுகிறது. அதுவும் அதே சைனாவில் தான் HMPV வைரஸ் பரவுவதாகவும், மீண்டும் லாக்டவுன் வரப்போவதாகவும் இந்திய மீடியாக்கள் சொல்லி வருகிறது. இந்திய மீடியாக்கள் மேலை நாட்டு மீடியாக்கள் எதை சொல்கிறதோ அதை அப்படியே தான் நமக்கு சொல்லி வருகிறது ஆனால் உண்மையில் சைனாவில் என்ன நடக்கிறது என்பதை யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை.
READ MORE: Top Reasons Star Health Insurance is Perfect for Your Family’s Well being
சைனாவிலிருந்து வந்த 2 வீடியோக்கள்
ஆனால் நம்முடைய தமிழ்நாட்டை சார்ந்த ஒருவர் சைனாவில் என்ன நடக்கிறது என்பதை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார் அதில் அவர்:
இந்திய மீடியாக்கள் மேலை நாட்டு மீடியாக்கள் என்ன சொல்கிறதோ அதை தான் அப்படியே சொல்கிறார்களே தவிர சைனாவில் என்ன நடக்கிறது ? என்பதை யாரும் பார்ப்பது கிடையாது. சைனாவில் அதிகமாக நோயாளிகள் உருவாவதற்கு காரணம் அந்த நாட்டில் உள்ள காலநிலை மாற்றம் தான். இப்போது சைனாவில் 0 டிகிரி காலநிலை உருவாகி இருக்கிறது. இதனால் நோயாளிகள் அதிகமாக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
எப்போதுமே டிசம்பர் ,ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் காலநிலை மாற்றத்தால் நிமோனியா வைரஸ், ப்ளு வைரஸ் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் அதிகமாக தான் இருப்பார்கள். இதற்குக் காரணம் இங்கே நிலவும் காலநிலை மாற்றம் தான். மீடியாக்கள் சொல்வது போல புது வைரஸ் உருவாகி இருக்கிறது என்பதும் சைனா முழுவதும் லாக் டவுன் என்பதும் கட்டுக்கதை . இவர்கள் சைனாவில் வந்து நேரடியாக பார்த்தது போல யூட்யூபில் வீடியோக்களை பதிவிடுகின்றார்கள். இது மிகவும் தவறு இதனால் எங்களுடைய குடும்பங்களும் இந்தியாவில் பாதிக்கப்படுகிறார்கள்.
— kamaal (@nnworldsnew) January 6, 2025
என்ற சைனாவில் நடக்கும் உண்மையான விஷயத்தைப் பற்றி ஒரு தெளிவான வீடியோவை அங்கே இருக்கும் தமிழ்நாட்டை சார்ந்த டாக்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கின்றார்.
கேரளாவை சார்ந்த மலையாளி சகோதரர் ஒருவர் அங்கு யாரும் இந்த வைரசுக்கு மாஸ்க் அணியவில்லை! ஒருவரோடு ஒருவர் நெருங்கி அமர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சைனாவில் எந்த லாக்டவுனும் போடவில்லை. அனைத்து கடைகளும் திறந்து தான் இருக்கிறது. அனைத்து வாகனங்களும் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது என்று அங்குள்ள விஷயத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோகளை நீங்களும் பாருங்கள்!
— kamaal (@nnworldsnew) January 7, 2025