
நாடு முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகி விட்டது. வடநாடுகளில் எங்கு சென்றாலும் இஸ்லாமியர்களை குறிவைத்து பல விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதில் மிக முக்கியமாக இந்துத்துவவாதிகள் படிக்காத இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் . இந்துத்துவாவை சார்ந்த சில இளைஞர்கள். புகைப்பிடித்துக் கொண்டு , பாடல் போட்டுக் கொண்டு வயல் வெளியே செல்கிறார்கள். அப்போது அங்கே ஒரு இஸ்லாமிய பெரியவர் நின்று கொண்டிருக்கிறார்.

அவரைப் பார்த்தவுடன் சில இளைஞர்கள் வண்டியில் இருக்கின்ற காவி நிறக் கொடியை கையில் எடுத்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டு பாடலுக்கு ஆடுகிறார்கள். அவர்கள் புகை பிடித்துக் கொண்டு ஆடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
READ MORE: திருப்பரங்குன்றம் – நீதிமன்றங்கள் கூறுவது என்ன?
இந்த வீடியோக்களை சிலர் தங்களுடைய பக்கங்களில் பதிவு செய்து. படிப்பறிவில்லாத இளைஞர்களை இந்துத்துவாதிகள் தங்களுடைய ஆயுதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சில போதை வஸ்துக்களை கொடுத்து மத கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் வடநாடுகளில் அரசு பள்ளிகள் சரியாக இயங்காதது தான் ! மத்திய அரசும் அரசு பள்ளிகள் மீது சரியான கவனம் செலுத்தாதது மிக முக்கிய காரணமாகும். என்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.
नजिस pic.twitter.com/I8Xtj2PoPF
— Nadeem Ahmed 🔻 ندیم احمد (@IamNadeem_A) February 10, 2025