இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் எங்கு சென்றாலும் இஸ்லாமிய எதிர்ப்பாகவே காட்சியளித்து வருகிறது. மாடுகளில் தொடங்கி வீடுகள் வரை அனைத்து இடங்களிலும் இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.
நடைபாதை திட்டம்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் என்ற இடத்தில் மஹாகாலேஸ்வரர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கு செல்வதற்கு ஒழுங்கான நடைபாதை வசதி இல்லை. அதனால் இப்போது நடைபாதை திட்டத்தை வேகமாக விரிவுபடுத்துவதற்காக உஜ்ஜெயின் மாவட்ட நிர்வாகம் அங்குள்ள நிஜாமுதீன் காலனியில் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
READ MORE: Health care insurance
பள்ளிவாசல் மற்றும் வீடுகள் இடிப்பு
நிஜாமுதீன் காலனியில் உள்ள தாக்கியா பள்ளிவாசல் மற்றும் பள்ளிவாசலை சுற்றியுள்ள 250 வீடுகள் ஜனவரி 11ஆம் தேதி இடிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலும் அதை சுற்றியுள்ள பல வீடுகளும் இப்போது அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கோயிலுக்காக பள்ளிவாசலையும், வீடுகளையும் இடிக்க வேண்டுமா? என்ற சர்ச்சை உருவாகி இருக்கிறது. ஒரு மதத்தை காப்பாற்றுவதற்காக இன்னொரு மதம் அழிக்கப்பட வேண்டுமா? என்று சமூக சிந்தனையாளர்கள் கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். பள்ளிவாசலை இடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Just another day in #NewIndia #Ujjain, MP : Dist administration of Ujjain demolished 250 houses including Masjid Takiya in Nizamuddin colony on January 11, to pave the way for expansion of the existing Mahakaleshwar Temple Corridor Project. pic.twitter.com/UpS2G1ZIjH
— Saba Khan (@ItsKhan_Saba) January 12, 2025