சில வருடங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கோயிலுக்குள் நுழைந்து ஒரு முஸ்லிம் சிறுவர் தண்ணீர் குடித்ததற்காக அந்த முஸ்லிம் சிறுவர் அநியாயமாக தாக்கப்பட்டார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஆனால் இப்போது ஒரு இந்து சிறுவர் தர்காவிற்குள் நுழைந்து தண்ணீர் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த இந்து சிறுவனின் பெயர் மணீஷ் ஜோசி.
இந்த சிறுவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தவுடன் அங்கு பக்கத்தில் இருக்கும் தர்காவிற்குள் சென்று அங்கு வைத்துள்ள தண்ணீரை குடித்து இருக்கின்றார். அவரை யாரும் அங்கே தடுக்கவில்லை. பிறகு வெளியே வந்ததும் ஒரு இஸ்லாமியர் எதற்காக தர்காவிற்குள் நுழைந்தாய் என்று கேட்ட போது தண்ணீர் குடிப்பதற்காக என்று பதில் சொல்கிறார் அந்த சிறுவர். அதற்கு அந்த நபர் பயப்படாதீர்கள் நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம் ! நீ எப்போது வேண்டுமானாலும் எங்கள் தர்காவுக்கு வந்து தண்ணீர் குடிக்கலாம் என்று மனிதாபிமானத்துடன் பேசுகின்றார்.
பிறகு அந்த நபர் உன்னுடைய பெயர் என்ன என்று அந்த சிறுவனிடம் கேட்ட போது என்னுடைய பெயர் மணீஷ் ஜோசி என்று கூறுகிறார். அதற்கு அந்த இஸ்லாமியர் நீ பயப்படாதே ! இஸ்லாத்தில் இங்கே வந்து தண்ணீர் குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இஸ்லாமிய மார்க்கம் அதற்கு தடை செய்யவும் இல்லை. இங்கே நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்னும் தண்ணீர் வேண்டுமா உங்களுக்கு ? என்று சிறுவர் இடத்தில் கேட்க . வேண்டாம் ! போதும் என்று சிறுவர் சொல்கிறார்.
உங்களுடைய வீடு எங்கே இருக்கிறது என்று அவர் கேட்கும் போது, இந்தப் பக்கம் தான் இருக்கிறது என்று அந்த சிறுவர் சொல்கிறார். பயப்படாமல் வீட்டிற்கு சென்று வாருங்கள் என்று அந்த இஸ்லாமியர் வழி அனுப்பி வைக்கின்றார்.
A Hindu Kid went to a Dargah to drink water; no one said anything, When he came out, A Muslim Youth said, "whenever you're thirsty, feel free to drink water.
— هارون خان (@iamharunkhan) December 29, 2024
This exemplifies the spirit of Islam, emphasizing hospitality & kindnes to all, regardless of background. pic.twitter.com/tfbMd87t7Z
இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து மனிதாபிமானத்திற்கு இந்த வீடியோ எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று பேசி வருகிறார். முன்பு நடந்த கோயில் விஷயத்திற்கு இந்த தர்காவுடைய விஷயம் அழகான பதிலை சொல்லி இருக்கிறது என்றும் சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவத்தை பற்றி பேசி வருகிறார்கள் .