இந்தியாவில் முஸ்லிம்களுடைய வீடுகள் மட்டும் குறி வைக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது என்பதாக இப்போது புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது.
முஸ்லிம் வீடுகள் இடிப்பு
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் ஜனவரி 20 ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள வனத்துறையினர் மகாமாயா மலையை வனப்பகுதியாக அறிவித்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குள்ள 60 வீடுகளில் அதுவும் குறிப்பாக முஸ்லிம்களுடைய வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக வனத்துறை நோட்டீஸ் ஒன்றை ஒட்டியது. திங்கட்கிழமை காலை 6:00 மணி அளவில் அவசரமாக புல்டோசர் வர வைக்கப்பட்டு முஸ்லிம்களுடைய 60 வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.
READ MORE: மீண்டும் இரண்டு பள்ளிவாசல் இடிப்பு ! 200 முஸ்லிம் வீடுகள் இடிப்பு
வனத்துறை அமைச்சர் முன்னிலையில் இது நடைபெற்றது. வீடுகளில் உள்ள தங்களுடைய பொருட்கள் எடுக்கப்பட்ட பிறகு தான் அங்குள்ள முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் குறி வைத்து தான் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள மக்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
Video :
लोकेशन : अंबिकापुर,सरगुजा,छत्तीसगढ़
— The Muslim (@TheMuslim786) January 21, 2025
दिनांक : 20 जनवरी
मुस्लिम आबादी वाले 60 मकानों को अवैध बताते हुए वन विभाग ने चलाया बुलडोजर।
स्थानीय लोगों का कहना है केवल मुस्लिम मकानों को चिन्हित कर तोड़ा गया है।
वन विभाग ने महामाया पहाड़ को वन भूमि बताते हुए घरों पर बुलडोजर चलाया 2 दिन… pic.twitter.com/dk8I6tHGZP